பெர்லின் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை தோல்வி அடைந்தார்.
பெர்லின் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி
Published on

பெர்லின்:

பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

இன்று நடந்த ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, ரஷியாவின் சாம்சோனோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சாம்சோனோவா 3-6, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com