பிரெஞ்சு ஓபன் தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஸ்ரீராம் பாலாஜி,யுகி பாம்ப்ரி

ஒரு மணி நேரம் 22 நிமிடங்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
பிரெஞ்சு ஓபன் தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஸ்ரீராம் பாலாஜி,யுகி பாம்ப்ரி
Published on

இந்திய வீரர்களான என். ஸ்ரீராம் பாலாஜி மற்றும் யுகி பாம்பிரி ஆகியோர், பிரெஞ்சு ஓபன் ஆடவர் இரட்டையர் போட்டியில் வெற்றியுடன் தங்களது பயணத்தை தொடங்கினர்.

ராபின் ஹாஸ் மற்றும் கான்ஸ்டன்டின் ஃபிரான்ட்சன் ஜோடியுடன் கடுமையாக போராடிய பாலாஜி மற்றும் பிரேசில் வீரர் மார்செலோ டெமோலினர், 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் வெற்றி பெற்றனர்.

மற்றொரு போட்டியில், பாம்ப்ரி மற்றும் அவரது கூட்டாளி மைக்கேல் வீனஸ், அர்ஜென்டினா வீரர்களான பிரான்சிஸ்கோ செருண்டோலோ மற்றும் மரியானோ கெஸ்டெல்போம் ஜோடியை ஒரு மணி நேரம் 22 நிமிடங்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

முதல் செட்டில் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற அவர்கள் கடுமையாகப் போராடிய போதிலும், இரண்டாவது ஆட்டத்தில் பாம்ப்ரி மற்றும் வீனஸ் நிதானமாக ஆடி, எளிதான வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் பம்ப்ரி மற்றும் வீனஸ் 7-5, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com