Stuttgard Open | நம்பர் 2 வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் முசோவா

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
கரோலினா முசோவா
கரோலினா முசோவா
Published on

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் செக் குடியரசின் கரோலினா முசோவா, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய முசோவா முதல் செட்டை 6-3 என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கோகோ காப் 2வது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அதிரடியாக ஆடிய முசோவா 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதனால் நம்ப ர் 2 வீராங்கனையான கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com