Monte Carlo Masters | அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர்

நம்பர் ஒன் வீரரான அல்காரஸை நேர்செட் கணக்கில் வீழ்த்தி சின்னர் மான்டே சார்லோ மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
Monte Carlo Masters | அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர்
Published on

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் முதல்நிலை வீரரான ஸ்பெயின் நாட்டின் அல்காரஸ்- 2-ம் நிலை வீரரான இத்தாலியின் சின்னர் பலப்பரீட்சை நடத்தினர்.

முதல் செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சின்னர் 7(7)-6(5) என முதல் செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றி 2-0 என நேர்செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

சின்னர் இந்த வருடம் கைப்பற்றிய 3-வது மாஸ்டர்ஸ் 1000 பட்டம் இதுவாகும். இதற்கு முன்னதாக இண்டியன் வெல்ஸ், மியாமி டைட்டிலை வென்றிருந்தார்.

அல்காரஸை வீழ்த்தியதன் மூலம் உலக தரவரிசையில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார் சின்னர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com