Madrid Open டென்னிஸ்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஆண்ட்ரீவா, கோஸ்ட்யூக்

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
Madrid Open டென்னிஸ்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஆண்ட்ரீவா, கோஸ்ட்யூக்
Published on

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் உக்ரைன் வீராங்கனையான மர்டா கோஸ்ட்யூக், ரஷியாவின் அனஸ்தசிய பொடபோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக விளையாடிய கோஸ்ட்யூக் 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் நம்பர் 9 வீராங்கனையான அமெரிக்காவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-4, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்டை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று இரவு நடைபெறும் இறுதிச்சுற்றில் மிர்ரா ஆண்ட்ரீவா, மர்டா கோஸ்ர்ட்யூக்கை சந்திக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com