

மியாமி ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டி ஒன்றில் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவைச் சேர்ந்த மார்ட்டின் டாம் ஜூனியரை எதிர்கொண்டார். இதில் ஸ்வெரேவ் 6-2, 6-4 என எளிதாக வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் பிரான்சஸ் தியாபோ, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆர்தர் கஸாக்ஸை எதிர்கொண்டார். இதில் தியாவோ முதல் செட்டை 7(7)- 6(1) எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 6-1 எளிதாக கைப்பற்றி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் குரோஷியாவைச் சேர்ந்த மெரின் சிலிச் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமாவை எதிர்கொண்டார். இதில் சிலிக் முதல் செட்டை 2-6 என இழந்தார். அடுத்த செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். 3-வது செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியாக 7(9)- 6(7) என சிலிச் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
செவ்சென்கோ, செருன்டோலோ, ஹம்பெர்ட் ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகோ காஃப் காலிறுக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முச்சோவா, கிரிஸ்டீ, அலெக்சாண்ட்ரா ஈலா ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.