

மியாமி ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் 3-ம் நிலை வீரரான ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார். இதல் ஸ்வெரேவ் 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான ஜானின் சின்னரை எதிர்கொள்கிறார் மற்றொரு அரையிறுதியில் 28-ம் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டின் ஆர்தர் பில்ஸ்- 21-ம் நிலை வீரரான செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஜிரி லெஹெக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.