

மியாமி ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 2-ம் வீரரான ஜானிக் சின்னர் 30-ம் நிலை வீரரான பிரான்ஸை சேர்ந்த கொரன்டின் மவுட்டெட்டை எதிர் கொண்டார். இதில் ஜானிக் சின்னர் 6-1, 6-4 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
3-ம் நிலை வீரரான ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் குரோசியாவைச் சேர்ந்த மரின் சிலிச்சை எதிர்கொண்டார். இந்த போட்டி 3 செட் வரை சென்றது. முதல் செட்டை ஸ்வெரேவ் 6-2 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 5-7 என இழந்தார். பின்னர் 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
19-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சஸ் தியாஃபோ செக் குடியரசின் ஜாகுப் மென்சிக்கை எதிர்கொண்டார். இந்த போட்டி நீண்ட நேரம் சென்றது. 3 செட்கள் நீடித்த நிலையில், 2 செட்கள் டை-பிரேக்கர் வரை சென்றது. முதல் செட்டை தியாஃபோ 7(7)-6(4) எனக் கைப்பற்றினார். 2-வத செட்டை 4-6 என இழந்தார். 3-வது செட் டை பிரேக்கர் வரை சென்றது. கடும்போராட்டத்திற்குப் பின் தியாஃபோ 7(13)-6(11) என கைப்பற்றினார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹாலிஸ், அமெரிக்காவின் மிக்கெல்சன் ஆகியோரும் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.