மியாமி ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ஸ்விடோலினா, ரிபாகினா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸில் முன்னணி வீராங்கனைகள் சபலென்கா, ஸ்விடோலினா, ரிபாகினா 3-வது சுற்றுக்கு முன்னேறினர்
சபலென்கா
சபலென்கா
Published on

மியாமி ஓபன் டென்னிஸில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையாக பெலாரஸைச் சேர்ந்த சபலென்கா அமெரிக்காவைச் சேர்ந்த ஏ. அலியை (Ann Ali) எதிர்கொண்டார். தரநிலை பெறாத அலி, சபலென்கா ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் முதல் செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சபலென்கா முதல் செட்டை 7(7)-6(5) எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த எலினா ஸ்விட்டோலினா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எமர்சன் ஜோன்ஸை எதிர் கொண்டார். இதில் 9-ம் நிலை வீராங்கனையான ஸ்விடோலினா 6-2, 6-4 என எளிதாக வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கஜகஸ்தானைச் சேரந்த 3-ம் நிலை வீராங்கனையான எலனா ரிபாகினா, சக நாட்டைச் சேர்ந்த யுலியா புதின்ட்சேவாவை எதிர்கொண்டார். இதில் ரிபாகினா 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சிட்சிபாஸ், அல்காரஸ் வெற்றி பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com