

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று நேற்று நடந்தது. இதில் உக்ரைன் வீராங்கனையான மர்டா கோஸ்ட்யூக், நம்பர் 9 வீராங்கனையான அமெரிக்காவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக விளையாடிய கோஸ்ட்யூக் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக மேட்ரிட் ஓபன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
தரவரிசையில் 23வது இடத்தில் இருக்கும் கோஸ்ட்யூக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.