Wimbledon Tennis: 3வது சுற்றில் மரியா சக்காரி, அனிசிமோவா அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
amanda anisimova
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முன்றாவது சுற்று போட்டிகள் நடந்தன.

இதில் நேற்று நடந்த போட்டியில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, சக நாட்டு வீராங்கனையான மேடிசன் கீஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அனிசிமோவா முதல் செட்டை 6-3 என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட மேடிசன் கீஸ் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-1, 6-2 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரியை எளிதில் வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் நான்காவது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி செக் குடியரசின் அலெக்சாண்ட்ரா ஈலா உடன் மோதுகிறார்.

மற்றொரு போட்டியில் மேடிசன் கீஸ் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை சந்திக்கிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com