Wimbledon Tennis: மரியா சக்காரி, அனிசிமோவா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
anisimova
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இன்று நடந்த போட்டியில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, வடக்கு மாசிடோனியாவின் லீனா ஜார்செஸ்கா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அனிசிமோவா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரி 6-3, 6-3 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் கிளாரா டாசனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com