Miami Open | மியாமி ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் இந்திய வீரர் ஏமாற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிசில் இந்தியாவின் மனஸ் தாம்னே, ஸ்பெயின் வீராரிடம் தோல்வி அடைந்தார்.
மனஸ் தாம்னே
மனஸ் தாம்னே
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இந்தியாவின் மனஸ் தாம்னே வைல்டு கார்டு மூலம் தகுதிபெற்றார்.

தகுதிச்சுற்றில் இந்தியாவின் மனஸ் தாம்னே, ஸ்பெயினின் ரபேல் ஜோடார் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜோடார் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் தாம்னே கடும் நெருக்கடி கொடுத்தார்.

இறுதியில், ரபேல் ஜோடார் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று முதல் சுற்றுக்கு முன்னேறினார். தகுதிச்சுற்றில் போராடிய மனஸ் தாம்னே தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com