French Open: 5 மணி, 57 நிமிடம் போராட்டம்-4வது சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா வீரர்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
juan manuel cerundolo
Published on

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் அர்ஜென்டினாவின் ஜுவான் மேனுவல் செரன்டலோ, ஸ்பெயினின் மார்ட்டின் லான்டலூஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய செரன்டலோ முதல் செட்டை 6-4 என எளிதில் வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2வது செட்டை மார்ட்டின் 7-6 (9-7) என போராடி கைப்பற்றினார்.

இதையடுத்து, செரன்டலோ 3வது செட்டை 7-6 (7-4) என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மார்ட்டின் 4வது செட்டை 7-6 (7-4) என வென்றார். இதனால் ஆட்டம் சமனிலை பெற்றது.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் அதிரடியாக ஆடிய செரன்டலோ 7-6 (10-8) என வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்தப் போட்டி 5 மணி நேரம், 57 நிமிடங்கள் நடைபெற்றது. பிரெஞ்சு ஓபனில் நடந்த நீண்ட போட்டிகளில் இதுவும் ஒன்றாகும்.

ஜுவான் மேனுவல் செரன்டலோ ஏற்கனவே நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னரை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com