துபாய் ஓபன் டென்னிஸ்: அனிசிமோவாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பெகுலா

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.இதில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
துபாய் ஓபன் டென்னிஸ்: அனிசிமோவாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பெகுலா
Published on

துபாய்:

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அனிசிமோவா முதல் செட்டை 6-1 என எளிதில் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெகுலா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com