சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இத்தாலி வீராங்கனை

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இத்தாலி வீராங்கனை
Published on

சின்சினாட்டி:

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, ரஷியாவின் வெரோனிகா குடர்மெடோவா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய பவுலினி முதல் செட்டை 6-3 என வென்றார். இதற்கு பதிலடியாக ரஷிய வீராங்கனை 2வது செட்டை 7-6 (7-2) என போராடி கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை 6-3 என கைப்பற்றிய ஜாஸ்மின் பவுலினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com