Indian Wells | அல்காரஸ்க்கு அதிர்ச்சி அளித்த மெட்வெதேவ்- பைனலில் சின்னருடன் பலப்பரீட்சை

அல்காரஸ்- மெட்வெதேவ்
அல்காரஸ்- மெட்வெதேவ்
Published on
Summary

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அல்காரஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் மெட்வெதேவ். இறுதிப் போட்டியில் சின்னருடன் பலப்பரீட்சை நடத்துகிறார்

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

முதல் அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான சின்னர், 4-ம் நிலை வீரரான ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

2-வது அரையிறுதி போட்டியில் முதல் நிலை வீரரான அல்காரஸ்- 11-ம் நிலை வீரரான மெட்வெதேவை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மெட்வெதேவ் முதல் செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றினார். 2-வது செட்டில் அல்காரஸ் கடும் சவால் விடுத்தார். இருந்தாலும் மெட்வெதேவ் ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் 2-வது செட் டை-பிரேக் வரை சென்றது. இறுதியில் மெட்வெதேவ் 2-வது செட்டை 7(7)-6(3) என கைப்பற்றினார்.

இதன்மூலம் 6-3, 7(7)-6(3) என நேர்செட் கணக்கில் மெட்வெதேவ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் மெட்வெதேவ்- சின்னர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com