விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்வியாடெக், சக்காரி வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.முதல் சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்வியாடெக், சக்காரி வெற்றி
Published on

லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் குடெர்மெடோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாக்டெக் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அன்னா பிளின்கோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com