Wimbledon Tennis: இகா ஸ்வியாடெக், ரிபாகினா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
iga swiatek
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் நேற்று நடந்த போட்டியில் நம்பர் 3 வீராங்கனையும், போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் 3வது சுற்றில் இகா ஸ்வியாடெக், பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலாவை சந்திக்கிறார்.

இகா ஸ்வியாடெக் கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கேட்டி மெக்னல்லியை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் 3வது சுற்றில் ரிபாகினா, பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்சை சந்திக்கிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com