Wimbledon Tennis: 3வது சுற்றில் நடப்பு சாம்பியன் அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
iga swiatek
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன.

இதில் நேற்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஈலா 7-6 (11-9), 6-2 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் நான்காவது சுற்றில் அலெக்சாண்ட்ரா ஈலா இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதுகிறார்.

இதன்மூலம் நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்து விம்பிள்டன் தொடரில் இருந்து வெளியேறினார்.

ஏற்கனவே முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மூன்றாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com