Miami Open Tennis | 2வது சுற்றில் முன்னணி வீராங்கனை ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.
இகா ஸ்வியாடெக்
இகா ஸ்வியாடெக்
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ளவரும், போலந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக், சக நாட்டு வீராங்கனையான மெக்டா லினெட் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஸ்வியாடெக் முதல் செட்டை 6-1 என எளிதில் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட லினெட் சிறப்பாக ஆடி அடுத்த இரு செட்களை 7-5, 6-3 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீராங்கனையாக இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்து 2வது சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com