Wimbledon Tennis: 2வது சுற்றுக்கு முன்னேறிய நம்பர் 3 வீராங்கனை

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
iga swiatek
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இன்று நடந்த போட்டியில் நமப்ர் 3 வீராங்கனையும், போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-1 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக டவுன்செண்ட் 2வது செட்டை 6-2 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இகா ஸ்வியாடெக் 6-3 என வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் 2வது சுற்றில் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை சந்திக்கிறார்.

இகா ஸ்வியாடெக் கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com