Miami Open Tennis | முதல் சுற்றில் 3 முறை சாம்பியனை வீழ்த்திய பிரிட்டன் வீராங்கனை

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.
பிரான்செஸ்கோ ஜோன்ஸ்
பிரான்செஸ்கோ ஜோன்ஸ்
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மூத்த வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் வைல்டு கார்டு மூலம் வாய்ப்பு பெற்றார்.

முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ், பிரிட்டனின் பிரான்செஸ்கோ ஜோன்ஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பிரான்செஸ்கோ 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் மியாமி ஓபனில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com