Rybakina | மகளிர் டென்னிஸ் தரவரிசை: இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய ரிபாகினா

இந்தியன் வெல்ஸ் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த ரிபாகினா ஒரு இடம் முன்னேறியுள்ளார்.
எலினா ரிபாகினா
எலினா ரிபாகினா
Published on

டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டது.

சமீபத்தில் நடந்த இந்தியன் வெல்ஸ் ஓபன் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு கஜகஸ்தானின் எலினா ரிபாகினா முன்னேறினார்.

இந்நிலையில், இந்தியன் வெல்ஸ் ஓபன் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஒரு இடம் முன்னேறி 2-வது இடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் பெலாரசின் சபலென்கா முதலிடத்தில் நீடிக்கிறார். போலந்தின் ஸ்வியாடெக் ஒரு இடம் சரிந்து 3-வது இடமும், அமெரிக்காவின் கோகோ காப் 4-வது இடமும், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 5-வது இடமும் பிடித்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com