Italy Open டென்னிஸ்: கோகோ காப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்விடோலினா

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.
Italy Open டென்னிஸ்: கோகோ காப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்விடோலினா
Published on

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில், நம்பர் 3 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், நம்பர் 7 வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஸ்விடோலினா 6-4 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை 7-6 (7-3) என கோகோ காப் கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஸ்விடோலினா 6-2 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

ஸ்விடோலினா மூன்றாவது முறையாக இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com