துபாய் சாம்பியன்ஷிப்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் எலினா ரிபாகினா

துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த போட்டியில் ரிபாகினா வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
துபாய் சாம்பியன்ஷிப்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் எலினா ரிபாகினா
Published on

துபாய்:

துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, போலந்து வீராங்கனை மக்டலேனாவுடன் மோதினார்.

இருவரும் தலா ஒரு செட்டை வசப்படுத்தினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை ரிபாகினா கைப்பற்றினார்.

இறுதியில், எலினா ரிபாகினா 7-6 (7-5), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com