Wimbledon Tennis: 3வது சுற்றுக்கு முன்னேறினர் ஜோகோவிச், மெத்வதேவ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
djokovic, medvedv
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் நேற்று நடந்த போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கிரீசின் ஸ்டபனோஸ் சிட்சிபாஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் 3வது சுற்றில் ஜோகோவிச், பிரான்சின் ஆர்தர் ரிண்டர்நெக் உடன் மோதுகிறார்.

மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 3-6, 6-3, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டேனியல் மெரிடாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com