Wimbledon Tennis: 2வது சுற்றுக்கு முன்னேறினர் ஜோகோவிச், மெத்வதேவ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
djokovic, medvedev
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் நேற்று நடந்த போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சீனாவின் வூ யீபிங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-4, 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் 2வது சுற்றில் ஜோகோவிச், கிரீசின் ஸ்டபனோஸ் சிட்சிபாஸ் உடன் மோதுகிறார்.

மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் குரோசியாவின் மரின் சிலிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் மெத்வதேவ், ஸ்பெயினின் டேனியல் மெரிடாவை சந்திக்கிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com