Italy Open டென்னிஸ்: ரிபாகினா, கோகோ காப் காலிறுதிக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.
Italy Open டென்னிஸ்: ரிபாகினா, கோகோ காப் காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான இவா ஜோவிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 5-7, 7-5, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா 6-0, 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

காலிறுதியில் ரிபாகினா உக்ரைனின் எலினா ஸ்விடோலினவையும், கோகோ காப் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவையும் சந்திக்க உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com