French Open டென்னிஸ்: 3வது சுற்றில் கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
coco gauff
Published on

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 தொடர்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நம்பர் 4 வீராங்கனையும், அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காப், ஆஸ்திரியாவின் அனஸ்தசியா பொடபோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பொடபோவா 4-6, 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

நான்காவது சுற்றில் பொடபோவா, ரஷியாவின் கலின்ஸ்கயா உடன் மோதுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com