Wimbledon Tennis: காலிறுதிக்கு முன்னேறிய ஜெசிகா பெகுலா, கோகோ காப்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
coco gauff, pegula
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 4வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன.

இதில் நேற்று நடந்த போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை இவா ஜோவிக் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய இவா ஜோவிக் முதல் செட்டை 6-4 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ஜெசிகா பெகுலா அடுத்த இரு செட்களை 6-3, 6-1 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக்கை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸ், உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக், செக் குடியரசின்

லிண்டா நோஸ்கோவா மற்றும் கரோலினா முசோவா ஆகியொரும் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இன்று இரவு நடைபெறும் காலிறுதி சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை கோகோ காப் உடனும், ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முசோவா உடன் மோதுகிறார்.

நாளை நடைபெறும் காலிறுதியில் உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியுடனும், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டன்ஸ் உடனும் மோதுகிறார்.

முன்னணி வீராங்கனைகளான பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் ரிபாகினா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உள்ளிட்ட பல்வேறு வீராங்கனைகள் தோல்வி அடைந்து வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com