Italy Open டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் கோகோ காப்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.
Italy Open டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் கோகோ காப்
Published on

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரீவா முதல் செட்டை 6-4 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட கோகோ காப் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-2, 6-4 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் கோகோ காப், ரொமேனியாவின் சொரானா சிர்ஸ்டியை சந்திக்க உள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com