சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி: இரட்டையர் பிரிவில் கனடா, பிரேசில் இணை பட்டம் வென்றது

இறுதிப் போட்டியில் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி, லுசா ஸ்டெபானி இணை வெற்றி.அன்னா லின்கோவா- நடிலா ஜலாமிட்ஸ் இணை தோல்வி.
 கேப்ரியல்லா டாப்ரோஸ்கி, லுசா ஸ்டெபானி
 கேப்ரியல்லா டாப்ரோஸ்கி, லுசா ஸ்டெபானி
Published on

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் கனடாவை சேர்ந்த கேப்ரியல்லா டாப்ரோஸ்கி- பிரேசிலை சேர்ந்த லுசா ஸ்டெபானி இணை, ரஷியாவின் அன்னா லின்கோவா- ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்ஸ் இணையை எதிர் கொண்டது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே மிகச் சிறப்பாக விளையாடிய கேப்ரியல்லா டாப்ரோஸ்கி-லுசா ஸ்டெபானி இணை 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அன்னா லின்கோவா -நடிலா ஜலாமிட்ஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com