Miami Open Tennis | நம்பர் 1 வீரருக்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்க வீரர்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.
கார்லோஸ் அல்காரஸ்
கார்லோஸ் அல்காரஸ்
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 3வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நம்பர் 1 வீரரும், ஸ்பெயினைச் சேர்ந்தவருமான கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய கார்டோ முதல் செட்டை 6-3 என வென்றார். இதற்கு பதிலடியாக அல்காரஸ் 2வது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் சிறப்பாக ஆடிய செபாஸ்டியன் கோர்டா 6-4 என வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த தோல்வியின்மூலம் நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸ் 3-வது சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com