விம்பிள்டன் டென்னிஸ் - அரையிறுதியில் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி தோல்வி

விம்பிள்டன் டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதிப் போட்டி நடந்தது. இதில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி தோல்வி அடைந்தது.
விம்பிள்டன் டென்னிஸ் - அரையிறுதியில் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி தோல்வி
Published on

லண்டன்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி, நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப், பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடியுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் போபண்ணா-மேத்யூ எப்டென் ஜோடி 5-7, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com