

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டாமி அலெக்ஸ் டி மினார் 6-2 என முதல் செட்டை வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட டாமி பால் 6-3 என 2வது செட்டைக் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய டாமி பால் 6-3 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் டாமி பால், பெருவின் இக்னசியோ ப்யூஸ் உடன் மோதுகிறார்.