Monte Carlo masters | காலிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
அல்காரஸ்
அல்காரஸ்
Published on

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அர்ஜெண்டினாவின் தாமஸ் மார்ட்டின் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் முதல் செட்டை 6-1 என எளிதில் வென்றார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை அர்ஜெண்டினா வீரர் 6-4 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அல்காரஸ் 6-3 என வென்றதுடன், காலிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெற உள்ள காலிறுதியில் அல்காரஸ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com