Orleans Masters: அரையிறுதியில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
தன்வி ஷர்மா
தன்வி ஷர்மா
Published on

பிரான்சில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது காலிறுதி போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்று ஒன்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, ஜப்பானின் நகோமி ஒகுஹரா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஜப்பான் வீராங்கனை 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் தாய்லாந்தின் பிட்சமோன் ஒபட்னிபுத் 21-12, 23-21 என்ற செட் கணக்கில் இந்தியாவின் இஷாராணி பரூவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி அடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com