ஹசாராங்கா அபாரம்: ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேட்பன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ரன்கள் விளாசினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி
Published on

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதரபாத் அணி 19.2 ஓவரில் வெறும் 125 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது.

இதனால், 67 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ஹசாரங்கா டி சில்வா ஆட்ட நாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com