டூபிளெசிஸ் அதிரடி- ஐதராபாத் அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேட்பன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ரன்கள் விளாசினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேட்பன் டூபிளெசிஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேட்பன் டூபிளெசிஸ்
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ரன்கள் விளாசினார். ரஜத் பட்டிதார் 48 ரன்கள், மேக்ஸ்வெல் 33 ரன்கள், தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் (நாட் ஒவுட்) எடுத்தனர்.

ஐதராபாத் அணி தரப்பில் ஜகதீஷா 2 விக்கெட், கார்த்திக் தியாகி ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com