டி20 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 118 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!

குழு 'ஏ' வில் இருந்து அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
டி20 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 118 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!
Published on

டி20 மகளிர் உலகக்கோப்பை 2026 தொடரின், இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 29வது லீக் போட்டியில், ஏ குழுவில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா, வங்கதேச அணிகள் மோதி வருகின்றன.

ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது.

ஷோபனா மோஸ்டரி அதிகபட்சமாக 42 ரன்கள் அடித்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ மலாபா 2 விக்கெட்டுகளும், மரிசானே காப், ஷப்னிம் இஸ்மாயில், நாடின் டி கிளெர்க் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 118 ரன்களை இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்யவுள்ளது. அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்ய தென்னாப்பிரிக்கா 18.5 ஓவர்களில் இந்த ரன்களை சேஸ் செய்யவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com