ஸ்பெயினில் இன்று தொடங்கும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 24 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு

2-வது சுற்று உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் பந்தயம் ஸ்பெயினின் கிரனடாவில் இன்று தொடங்கி 12-ந்தேதி வரை நடக்கிறது.
ஸ்பெயினில் இன்று தொடங்கும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 24 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு
Published on

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி இந்த ஆண்டு உலகம் முழுவதும் 8 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 2-வது சுற்று உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் பந்தயம் ஸ்பெயினின் கிரனடாவில் இன்று தொடங்கி 12-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 51 நாடுகளைச் சேர்ந்த 434 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

மொராக்கோவில் நடந்த முதலாவது சுற்றில் ஒரு பதக்கம் கூட வெல்லாமல் ஏமாற்றம் அளித்த இந்தியர்கள் இந்த போட்டியில் பதக்க வேட்டை நடத்த கவனம் செலுத்துகிறார்கள்.

24 பேர் கொண்ட இந்திய அணியில் ரிதம் சாங்வான் (25 மீட்டர் பிஸ்டல்) உலக போட்டியில் 9 பதக்கம் வென்ற அனுபவசாலியான அஞ்சும் மோட்கில் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவு) மெகுலி கோஷ் (10 மீட்டர் ஏர் ரைபிள்ஸ்) செயின் சிங், அகில் ஷியோரன், தனுஷ் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்றவரான மனு பாக்கர், உலக சாம்பியன் சம்ராத் ராணா, சுருச்சி. சரப்ஜோத் சிங் உள்ளிட்டோர் அணியில் இடம் பெறவில்லை. சுழற்சி அடிப்படையில் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதால் அவர்கள் அடுத்த மாதம் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com