சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!

2026 ஐபிஎல் தொடரில் இனிவரும் போட்டிகளில் ஆயுஷ் மாத்ரே விளையாடமாட்டார் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி... ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே இந்த ஐபிஎல் சீசனில் இனி விளையாடமாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை அணி தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,

“ஏப்.18 அன்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்தபோது, இடது தொடை தசையில் ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டது. இதன் ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் 2026 தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இந்தக் காயத்திலிருந்து அவர் குணமடைய 6 முதல் 12 வாரங்கள் ஆகும்.

ஆயுஷ் இந்த ஐபிஎல் தொடரில் 30-க்கும் அதிகமான சராசரியிலும், 175-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டிலும் 201 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் அவர் இந்தத் தொடரில் 2 அரைசதங்களையும் அடித்துள்ளார்.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேண்டுகிறது.

இந்திய மற்றும் சென்னை அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆயுஷ் மாத்ரே காயம் அடைந்தும் அவரைத் தொடர்ந்து விளையாட வைத்ததற்காக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததும், இதனால் இந்த சீசன் முழுவதும் அவர் விளையாட முடியாமல் போகலாம் எனக் கூறியிருந்தும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com