Singapore Open பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறியது சாத்விக்-சிராக் ஜோடி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடைபெறுகிறது.
Sadwik, Chirag
Published on

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்வி-சிராக் ஷெட்டி ஜோடி, தைவானின் யாங் போ ஹான்- லீ ஜே ஹுய் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி முதல் செட்டை 21-15 என வென்றது. இதற்கு பதிலடியாக தைவான் ஜோடி 2வது செட்டை 21-11 என கைப்பற்றியது.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் சாத்விக் - சிராக் ஜோடி அதிரடியாக ஆடி 21-18 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com