யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்தியாவின் ரோனக் சவுகான் தோல்வி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
ronak chouhan
Published on

யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் ரோனக் சவுகான், தைவானின் சூ லி யாங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய தைவான் வீரர் 21-17, 21-19 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ரோனக் சவுகான் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் தேவிகா சிஹாக் 21-15, 11-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் லைன் கிறிஸ்டோபர்சென்னிடம் தோல்வி அடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com