சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது.இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி
Published on

பீஜிங்:

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் டொமோகா மியாசகி உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 21-15 என பி.வி.சிந்து கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ஆடிய ஜப்பான் வீராங்கனை 21-8 என 2வது செட்டை வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 21-17 என பி.வி.சிந்து வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com