அதிரடி காட்டிய பஞ்சாப்... ப்ரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கான்லி அரைசதம் - லக்னோவிற்கு 255 ரன்கள் இலக்கு!

லக்னோவிற்கு எதிரான போட்டியில் 254 ரன்கள் குவித்தது பஞ்சாப் கிங்ஸ்.
அதிரடி காட்டிய பஞ்சாப்... ப்ரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கான்லி அரைசதம் - லக்னோவிற்கு 255 ரன்கள் இலக்கு!
Published on

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்துள்ளது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக பிரியான்ஷ் ஆர்யா 93 ரன்களும், கூப்பர் கான்லி 87 ரன்களும் எடுத்தனர். லக்னோ தரப்பில் சித்தார்த், ப்ரின்ஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், மொஷித் கான், முகமது ஷமி தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 255 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு லக்னோ பேட்டிங்கை தொடர உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com