ஒலிம்பிக் நிறைவு விழாவில் மனு பாக்கருடன் இணைந்து தேசிய கொடி ஏந்துகிறார் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்

ஒலிம்பிக் நிறைவு விழா வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மனு பாக்கர் மற்றும் ஸ்ரீஜேஷ் ஆகியோர் இந்திய தேசிய கொடி ஏந்துகின்றனர்.
ஒலிம்பிக் நிறைவு விழாவில் மனு பாக்கருடன் இணைந்து தேசிய கொடி ஏந்துகிறார் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்
Published on

பாரீஸ்:

ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலம், ஹாக்கியில் ஒரு வெண்கலம் மற்றும் ஈட்டி எறிதலில் ஒரு வெள்ளி என 5 பதக்கங்களை வென்றுள்ளது.

தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே தலா ஒரு வெண்கலமும், இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஒரு வெண்கலமும் வென்றுள்ளனர்.

இதற்கிடையே, ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை வெண்கலம் வென்ற மனு பாக்கர் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் இந்தியா தேசியக்கொடியை ஏந்திச் செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com