ஒலிம்பிக் பளுதூக்குதல்: 1 புள்ளியில் பதக்க வாய்ப்பை இழந்த மீராபாய் சானு

மீராபாய் சானு 49 கிலோ எடைபிரிவுக்கான போட்டியில் பங்கேற்றார்.மீராபாய் சானு 199 புள்ளிகளுடன் 4 ஆம் இடம் பிடித்தார்.
Mirabai Chanu
Published on

ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளது. இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைபிரிவுக்கான போட்டியில், இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார்.

அவர், ஸ்ட்ரச் பிரிவில் 88 புள்ளி கிளீன் அண்ட் ஜர்க் பிரிவில் 111 புள்ளிகள் என மொத்தம் 199 புள்ளிகள் பிடித்து 4ம் இடம் பிடித்தார். 114 கிலோவை தூக்கும் இறுதி முயற்சியில் மீராபாய் சானு தோல்வி அடைந்தார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மீராபாய் சானு 199 புள்ளிகளுடன் 4 ஆம் இடம் பிடித்தார்.

இதே சுற்றில் பங்கேற்ற தாய்லாந்து வீராங்கனை மீராபாய் சானுவை விட ஒரு புள்ளி (200 புள்ளிகள்) அதிகமாக பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். ஒருபுள்ளி வித்தியாசத்தில் மீராபாய் சானு பதக்க வாய்ப்பை இழந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com