ரோகித் இல்லை... குஜராத் அணிக்கு எதிராக பேட்டிங் செய்யும் மும்பை!

மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ரோகித் இல்லை... குஜராத் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்யும் மும்பை!
Published on

ஐபிஎல் 2026 தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 30 லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்கிறது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. மும்பை இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் தோல்வியை சந்தித்துள்ளது.

குஜராத் அணி மூன்றில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் வெற்றிப்பெற இரண்டு அணிகளும் தீவிரமாக முயற்சிக்கும். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை பிளேயிங் லெவன்

டேனிஷ் மலேவார், குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), நமன் தீர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), திலக் வர்மா, ஷெர்பேன் ரூதர்போர்ட், மிட்செல் சாட்னர், க்ரிஷ் பஹத், ஜஸ்ப்ரித் பும்ரா, ஏ.எம். கசன்ஃபர்

குஜராத் பிளேயிங் லெவன்

சுப்மன் கில்(கேப்டன்), சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான், ரஷித் கான், முகமது ஷமி, காசிகோ ரபாடா,பிரசித் கிருஷ்ணா, அசோக் ஷர்மா

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com